South Eastern University of Sri Lanka

IR South Eastern University of Sri Lanka
Not a member yet
    1846 research outputs found

    யாழ்ப்பாண சமூகக் கட்டமைப்பில் சின்னமேளம் - ஒரு வரலாற்றுப் பாா்வை

    No full text
    யாழ்ப்பாணச் சமூகக் கட்டமைப்பில் சின்னமேளம் எனப்படுகின்ற தேவதாசிகளது நடனமென்பது ஏறத்தாழ 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அப்பகுதிகளில் செல்வாக்குப் பெற்றதொரு நடனமாகவே இருந்து வந்தது. சோழரது ஆட்சிக்காலத்தின் பின்னராக இலங்கையில் தோற்றம் பெற்ற தேவதாசிகள் எனப்படுபவர்களது இத்தகைய நடனமானது 18, 19ஆம் நூற்றாண்டுகளில் மட்டுமன்றி 20ஆம் நூற்றாணடின் நடுப்பகுதிவரை கூட யாழ்ப்பாணத்திலுள்ள பெரும்பாலான சைவ ஆலயங்களில் நடைபெற்ற ஒரு நடன வகையாகக் காணப்பட்டது. அதாவது அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான ஆலயங்களாக விளங்கிய சைவ ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்ற சமயங்களில் இவர்களது நடனமானது திருவிழாக்களின் ஒருபகுதியாக இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய இவர்களது நடனத்தினை அக்காலப்பகுதியில் சின்னமேளம் என்ற பெயரினால் பொதுவாக அழைப்பர். அவ்வகையில் அக்கால யாழ்ப்பாண சைவ மக்களது பண்பாட்டில் பிரிக்கமுடியாத ஒரு அம்சமாக இவர்களது நடனமானது காணப்பட்டிருந்தது. (ஈழகேசரி,1936 ஜனவரி 07) மக்கள் பெருமளவில் கூடுகின்ற இடமாக ஆலயங்கள் காணப்பட்டதுடன் பக்திப்பாடல்கள் பாடப்பட்டுப் பலவிதமான விழாக்களும் கொண்டாடப்படுகின்ற இடமாகவும் அது காணப்பட்டது. ஆரம்ப காலங்களில் தமிழ், சமஸ்கிருத சங்கமத்தில் தோன்றி வளர்ந்த நுண்கலை, சிற்பக்கலை போன்றன ஆலயங்களை மையமாகக் கொண்டே வளர்க்கப்பட்டன. ஆலயத் தொடா்பு என்ற இவ்வம்சமானது நுண்கலையோடு தொடர்புடைய ஆலயங்களுக்குத் தம்மை அர்பப்ணித்த தேவதாசிகளுடன் சம்பந்தப்பட்டதாகவும் சோழவரலாற்றின் அரசியல் கலாசாரக் குறியீடாகவும் காலக்கிரமத்தில் வளர்ச்சிகண்டது. (சிவசாமி, வி. 2005) எனவே எல்லோராலும் வெறுக்கப்பட்ட, சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட தாசியொருத்தி கலையைத் தொழிலாகக் கொண்டு ஆலயத்துக்குள் நுழைவதைக் குறிக்கும் பதம் தேவதாசிக்குப் பொருத்தமான பதமாகும். இது இவ்வாறிருக்க இந்நடனத்திற்கு எதிராக இத்தகைய நிகழ்வுகள் ஆலயங்களில் நடைபெறுவது தவிர்க்கப்படுதல் வேண்டுமெனவும், இது தமிழ் மக்களது கலாசாரத்திற்கு ஊறினை விளைவிப்பதாகவும் அவ்வப்போது யாழ்ப்பாண சமூகத்திலிருந்த சில முற்போக்கான சிந்தனை உள்ளவர்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறெனினும் பொழுது போக்கு சாதனங்களது அதீத வளர்ச்சியின் பின்னணியில் இந்நடனமானது படிப்படியாகச் செல்வாக்கினை இழந்து வந்து தற்காலத்தில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டதெனலாம்

    சுற்றுச்சூழல் ஒழுக்கவியல்: சுற்றுச் சூழல் கல்வியின் நோக்கம்

    No full text
    இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தொழில் உற்பத்தியானது உச்ச நிலையை அடைந்துள்ளது. இதன் பேறாக உலக சுற்று சூழல் நெருக்கடி தீவிரமாக மோசமடைந்ததுள்ளது. இந்த சுற்றுச்சூழல் நெருக்கடியைத் தீர்க்கும் பொருட்டு அரசாங்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்கள் வல்லுனர்கள் தொழிநுட்ப பணியாளர்கள் இது தொடர்பான ஆய்வுகளை வலியுறுத்தினர். இந்த அவசர தேவையை பூர்த்தி செய்ய நிபுணர்கள் அதிகாரிகளின் வேண்டுதலை நாடி நின்றனர். எனினும் சில நாடுகளின் சமூக பிரிவினருக்கிடையிலான நடத்தையில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் சூழல் நடத்தை தொடர்பாக ஒரு சரியான புரிதல் இருக்க வேண்டும், அத்துடன் சுற்றுச்சூழல் நிபுணர்களால் இவற்றைத் தீர்க்க முடியுமாகயிருந்தால் மட்டுமே இந்தப் பிரச்சினையைத் திறம்பட தீர்க்க முடியும் அவ்வாறு இல்லாதவரை அவற்றைத் தீர்க்க முடியாது. சுற்றுச்சூழல் ஒழுக்கவியலின் முக்கியத்துவம் சமீபத்திய காலங்களாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும். சூழல் தொடர்பான விடயங்களில், மக்களுடைய மனப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்காற்ற வேண்டிய பொறுப்பு சமுதாயங்களுக்கு உண்டு என்ற புரிந்துணர்வை உருவாக்குதல், பாதுகாப்பானதும், வளமுள்ளதுமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காகக் கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகளை வெளிப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு இடம்பெறுகிறது. இவ்வாய்வினைச் சரியான முறையில் மேற்கொள்வதற்கு விபரண முறையியல் பயன்படுத்தப்படுவதோடு இவ்வாய்வுக்குரிய தரவுகளாக, சுற்றுச் சூழல் ஒழுக்கவியலை அறிய உதவும் மூல நூல்கள், சுற்றுச்சூழல் பிரகடனங்கள், சுற்றுச் சூழல் ஒழுக்கம் தொடர்பில் விவாதிக்கும் ஆய்வுக் கட்டுரைகள், சஞ்சிகைகள், இணையத்தளத் தகவல்கள் என்பனவற்றிலிருந்து தரவுகள் பெறப்பட்டு இவ்வாய்வு வடிவமைக்கப்பட்டுள்ளது

    உள சமூக ஆற்றுப்படுத்துகைகளாகக் கவிதைகள்: அகிலன் மற்றும் நிலாந்தன் ஆகியோரது கவிதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு

    No full text
    இந்த ஆய்வானது கவிதை என்னும் கலைவடிவம் எவ்வாறு கூட்டு மனக்காயங்களை - உளசமூக நெருக்கீடுகளைக் கடந்து செல்வதற்கான கலையூடகமாக தொழிற்படுகின்றது என்பது பற்றி ஆராய்கின்றது. இதற்கு அகிலனின் "பதுங்குகுழி நாட்கள்‟, "சரமகவிகள்‟ மற்றும் நிலாந்தனின் "யுகபுராணம்‟ ஆகிய கவிதைப் பிரதிகள் அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன. கவிதை அடிப்படையில் தனித்துவமான மன உணர்வெளிச்சிகளின் வெளிப்பாடாகவே அமையும் கலைவடிவமாதலால் தனிமனித மற்றும் சமூக உள நெருக்கீடுகளையும், கூட்டு மனக்காயங்களையும், துயரங்களையும் வெளிப்படுத்தவும், பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பான கலை ஊடகமாகவும் அவற்றைக் கடந்து செல்வதற்கான வழியாகவும் அமைந்து விடுகின்றது. ஈழத்தில் யுத்தம் ஏற்படுத்திய உளநெருக்கீடு மற்றும் கொதிநிலைகளிலிருந்து மேற்கிளம்பிய மேற்படி கவிதை தொகுதிகளை, உளவியல் மற்றும் அழகியல் முறைகளினூடாக அணுகி, அவை யுத்தத்தையும், அதன் குரூரத்தையும், அதை உந்தித்தள்ளிய கருந்து நிலைகளையும் எவ்வாறு கேள்விக்குள்ளாக்குகின்றன? அத்துயரங்களிலிருந்தும் காயங்களிலிருந்தும் எவ்வாறு கடந்து செல்ல முயல்கின்றன? வாழ்க்கை பற்றியும், எதிர்காலம் பற்றியதுமான நம்பிக்கையினை எவ்வாறு கட்டி எழுப்ப முயல்கின்றன? இவையாவற்றையும் அவை எவ்வாறு உளவியல் மற்றும் அழகியல் நேர்வுகளாக வெளிப்படுத்துகின்றன என்பது பற்றி ஆராய்கின்றது. அதற்கான மொழியுடலை எவ்வாறு கட்டுகின்றன என்பது பற்றியும் இங்கு ஆராயப்படுகின்றது

    லக்கானுடைய சுயம் பற்றிய கருத்தாக்கம் - ஒரு பகுப்பாய்வு

    No full text
    உளவியல் அறிஞரான ஜாக்ஸ் லக்கான் (1901-1981) முன்வைத்த "மனிதத் தன்னிலை‟ எனும் "சுயம்‟ பற்றியதான கருத்து உளவியலை இன்னுமொரு கட்டத்திதிற்கு நகர்த்தியிருப்பதாக உளவியலாளர்கள் கருதுவர். ஓவ்வொரு மனிதனும் பிறப்பதற்கு முன்னரே மொழியும் மற்றவையும் தனிப்பட்ட மனித சுயத்தைக் கட்டமைப்பதற்கு தயாராக இருக்கின்றன. அவன் பிறந்தவுடன் அவனுடைய ஊடாட்டம் மற்றையவற்றுடன்தான் தொடங்குகிறது. அந்தவகையில் தாய் அவனுடைய முதல் மற்றமையாகும். பிறவற்றுடனான அவனுடைய முதலனுபவமே மொழித் தன்மை கொண்டது. இது புரிதலுக்கு முற்கோளாக மொழியிருப்பதைக் குறிக்கிறது. மொழி தன்னை மற்றையவையிலிருந்துத னியான ஒன்றாக (சுயத்தைக்) கட்டமைப்பதற்கு உறுதுணையாக உள்ளது. இவ்வாய்வு சுயம் கட்டமைக்கப்படுவதிலுள்ள இயங்கியல் பற்றி ஆராய்கிறது. சுயமும் மற்றயவையும் இரு எதிர் நிலைகளாகும். எதிர் நிலைகள் என்பது விடயங்கள் ஒன்றை ஒன்று அர்த்தமுடையதாக்குவதற்கு இன்றியமையாததாகும். இயங்கியலின் ஒருபடிநிலையான இது இயங்கியலின் முக்கிய இயல்புமாகும். இவ்வாய்வு சுயம் பற்றிய லகானுடைய கருத்தாக்கம் கட்டமைக்கப்படுவதில் இயங்கியல் முறையின் இயல்பு காணப்படுகின்றது என வாதிப்பதுடன் சுயத்தைக் கட்டமைப்பதிலுள்ள மொழியின் இன்றியமையாமையையும் கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் இவ்வாய்வு விபரிப்பு முறை மற்றும் விமர்சன முறை என்பனவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது

    Crisis of second republic constitution and consequence of a new constitution in Sri Lanka: a critical analysis

    Get PDF
    ஒவ்வொரு நாட்டிற்கும் அரசியல் திட்டம் என்பது முக்கியமாக காணப்படுகின்றது. ஏனெனில் அதுவே முழுமையாக ஒரு அரசினை செயற்படுத்தும் கருவியாக இருப்பதோடு இவ் அரசியலமைப்பானது ஒவ்வொரு அரசிற்கும் ஏற்றவகையில் நெகிழும், நெகிழா அரசியலமைப்பாகவும் ஒற்றையாட்சி, சமஷ்டியாட்சி அரசியலமைப்பாகவும் மற்றும் எழுதப்பட்ட எழுதப்படாத அரசியலமைப்பாகவும் அமைந்துள்ளது. இதன்படி இலங்கையானது எழுதப்பட்ட நெகிழா ஒற்றையாட்சி அரசியலமைப்பினைக் கொண்டுள்ளது. பிரித்தானியா இலங்கையில் காலணியாதிக்கத்தினை நிலை நாட்டிய காலம் முதல் இலங்கையில் முறையே 1833, 1910, 1921, 1924, 1931, 1947 ஆண்டுகளில் பல்வேறு அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பும் அதன் பின்னர் 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பும் இலங்கை மக்களால் தமக்கென உருவாக்கிக் கொள்ளப்பட்டது. இவ்வாறு 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கையின் அரசியலமைப்பு இன்றுவரையிலும் இலங்கையில் நடைமுறையில் இருந்தாலும் இது பல்வேறு குறைபாடுகளையும் நெருக்கடிகளையும் கொண்ட அரசியலமைப்பாகவே காணப்படுகின்றது. இந் நெருக்கடிகள் மற்றும் புதிய அரசியலமைப்பின் முக்கியத்துவம் என்பவற்றை உளள்டக்கிய ஒரு விமர்சனப் பகுப்பாய்வாகவே இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது

    The rise of Islam phobia concept and its impacts in post war Sri Lanka

    Get PDF
    இஸ்லாமோபியா எனப்படும் இஸ்லாமிய எதிர்ப்பு எனும் கருத்தியலானது மேற்கத்தேய நாடுகளில் பரவி வருகின்ற அல்லது இஸ்லாமிய அச்சத்த்pன் விளைவாக கட்டமைக்கப்பட்ட கருத்தியலாகக் காணப்படுகிறது. இஸ்லாமிய உலகிலும் மேற்கத்தேய நாடுகளிலும் ஏற்பட்டிருக்கும் நவீன இஸ்லாமிய எழுச்சியின் வேகமான அலைகள் உலக மக்களை அதனை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளன. குறிப்பாக மேற்குலகில் மிக வேகமாக இஸ்லாம் பரவி வருவதன் விளைவாக கிறிஸ்தவ பாதிரிமார்களும், மேற்குலகின் சில அறிஞர்களும் இஸ்லாம் குறித்துப் போலியான தகவல்களை முன்வைப்பதோடு முஸ்லிம்களை கொடூரமானவர்களாகவும், பயங்கரவாதிகளாகவும் காட்ட முனைந்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறான செயற்பாடுகளினால் இஸ்லாமோபியா எனப்படும் இஸ்லாமிய எதிர்ப்பு எனும் கருத்தியலானது மேற்குலகினால் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இன்று இக்கருத்தியலானது மேற்குலகில் மட்டுமன்றி இலங்கையிலும் இதன் தாக்கம் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது இலங்கையில் மூன்று தசாப்த கால போருக்குப் பின்னர் இன, மத வாத சிங்கள பௌத்த கடும் போக்கு சக்திகள் இலங்கை முஸ்லிம் சமூகத்தை உளவியல் ரீதியில் பலவீனப்படுத்தி தாம் அடையத் துடிக்கும் இலக்குகளை எட்டிவிட இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை இலங்கையிலும் இஸ்லாமிய எதிர்ப்பு தீவிரமாக பரவி வருகின்றமையை பிரதிபலிப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. எனவே இதனை மையப்படுத்தியதாக ஆய்வுப்பிரச்சினை காணப்படுகின்றது. இதற்கமைய இவ்வாய்வானது இலங்கையில் போருக்குப் பின்னரான இஸ்லாமோபியா சிந்தனையும் அதன் தாக்கத்தினையும் கண்டறிவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனை மேற்கொண்டு செயற்படுவதற்கு இச்சிந்தனையின் தாக்கத்தினை அடையாளம் காணுவதினையும் இவ்வாய்வுக்கு இரண்டாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு பண்பு சார் பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் விவரணப் பகுப்பாய்வாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவரணப் பகுப்பாய்வின் மூலமாக சிங்கள பௌத்த கடும் போக்கு சக்திகளினால் இலங்கையில் இஸ்லாமோபியா அச்சத்தின் வெளிப்பாடு மற்றும் அதன் மூலமாக ஏற்பட்ட தாக்கங்களாக கடும் பௌத்த தேசிய இயக்கங்களின் தோற்றம், இன நல்லிணக்கம் பாதிப்படைந்தமை, ஆட்சி மாற்றம் ஏற்பட்டமை, முஸ்லிம்களின் மதஸ்தலங்கள் தாக்கப்படுகின்றமை, முஸ்லிம்களின் கலாசாரம் மற்றும் பாதிப்படைந்தமை மற்றும் சர்வதேச பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புபடுத்துகின்றமை என்பன இனங்காணப்பட்டுள்ளன

    நனோ தொழில்நுட்பத்தினால் ஏற்படுகின்ற ஒழுக்கவியல் பாதிப்புக்கள் - ஓர் ஆய்வு

    No full text
    இன்று விஞ்ஞான மெய்யியலிலும், ஒழுக்கவியலிலும் விசாரணை செய்யப்படுகின்ற முக்கியமான எண்ணக்கருக்களில் "நனோதொழில்நுட்பமும்‟ ஒன்றாகும். உலகமயமாக்கல் விடயத்தில் இத்தொழில்நுட்பத்தின் வகிபாகம் மிகவும் இன்றியமையாதது. கிரேக்க மொழியில் "நனோ‟எனும் சொல் "குள்ளம்‟ என்ற பொருளைத் தருகிறது. இதிலிருந்து நனோ தொழில்நுட்பவியல் என்பதை வியாக்கியானப்படுத்துகின்ற போது மிக நுண்ணிய பொருட் கூறுகளுடனானதொரு தொழில்நுட்பம் என வியாக்கியானப்படுத்த முடியும். நனோ தொழில் நுட்பம் பற்றி முதலில் பேசியவராக ரிச்சட் பெயின்மான் (1959) காணப்படுகிறார். சாதாரணமாக இன்று குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரம் போன்றன கூட நனோ தொழிநுட்பத்தினால் உருவாக்கபடுகிறது. இவ்வாய்வு நனோ தொழில்நுட்பம் என்றால் என்ன? என்பது பற்றிய சுருக்க விளக்கத்துடன் அதனுடைய ஒழுக்கவியல் ரீதியான பாதிப்புக்களைஅடையாளம் காண்கின்ற முனைப்பில், முக்கிய ஒழுக்கவியல் பாதிப்பாக மிகநுண்ணிய தொழில்நுட்பத்தை (நனோ தொழில்நுட்பம்) கொண்டு தயாரிக்கப்படும் இயந்திரங்களின் அபரிமிதமான பெருக்கத்தால் ஏற்படுகின்ற “தனிப்பட்ட வாழ்க்கையின் சிதைவு” மையப்படுத்தப்படுகிறது. இவ்வாய்விற்கான முறையிலாக விளக்கமுறையும், ஒழுக்கவியல்சார் பகுப்பாய்வு முறையும் பயன்படுத்தப்படுகிறது

    அகுரணை பிரதேச வெள்ள அனர்த்தமும், அதற்கான காரணங்களும்

    No full text
    உலகில் அதிகமாக நிகழ்ந்து வரும் அனர்த்தங்களில் வெள்ள அனர்த்தமும் ஒன்றாகும். பொதுவாக வெள்ளம் என்பது ஒரு நிலப்பரப்பில் அளவுக்கதிகமாக வழமைக்கு மாற்றமான முறையில் நீர் நிறைந்து நிலமட்டத்திலிருந்து நீர் வழியாமல் உயர்ந்த மட்டத்தினை கொண்ட நிலையினை குறிக்கும். இவ் அனர்த்தமானது உலகின் பல பாகங்களில் நிகழ்ந்து வருகின்றது. அந்த வகையில் மத்திய மாகாண கண்டி மாவட்ட அகுரணை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அகுரணை 6ஆம் மைல் சந்தி, துணுவில, தெலுமுகஹவத்த பிரசேங்களில் அடிக்கடி வெள்ள அனர்த்தம் ஏற்படுகின்றது. இதனால் பிரதேச மக்கள் பலவிதமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இவ்வெள்ளத்துக்கான காரணங்களை ஆராய்வதே ஆய்வின் பிரதான நோக்காகவுள்ளது. மேலும் அனர்த்தத்தினால் பிரதேச மக்கள் முகங்கொடுக்கும் சமூக, பொருளாதார, சூழல் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவருதல், வெள்ள அனர்த்தத்தினை குறைப்பதற்கான தீர்வுகளை முன்மொழிதல் என்பன ஆய்வின் துணை நோக்கங்களாக உள்ளன. இவ்வாய்வுக்கான முதல்நிலை தரவு சேகரிப்பு முறைகளாக நேர்காணல், கலந்துரையாடல், வினாக்கொத்துக்களை பகிர்தளித்தலும் இரண்டாம் நிலை தரவு சேகரிப்பு முறைகளாக பத்திரிகை, புள்ளிவிபரவியல்தரவுகள், இணையம் போன்றனவும் பயன்படுத்தப்பட்டன. மேலும் இவ்வாய்வுக்கு MS OFFICE, ARC GIS போன்ற கணினி மென்பொருட்களும் பயன்படுத்தப்பட்டன. அத்தோடு ஆய்வின் முடிவாக வெள்ளத்துக்கான காரணங்களை இணங்கண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதோடு மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவர முடிந்தது. மேலும் வெள்ள அனர்தத்தினைக் கட்டுப்படுத்த தீர்வுகளைக்கூறி நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை ஏற்படுத்துவதே இவ்வாய்வின் விளைவாக அமையும்

    இலங்கையில் போர்த்துக்கேயரது மேலாதிக்கமும் சுதேசிகளது எதிர்நடவடிக்கைகளும்- யாழ்ப்பாண இராச்சியத்தை சிறப்பாகக்கொண்ட ஓர் ஆய்வு

    No full text
    போா்த்துக்கேயர் இலங்கையில் காலடி பதித்த சமயம் இங்கிருந்த கோட்டை, கண்டி மற்றும் யாழ்ப்பாண அரசுகளது ஆட்சியாளாக் ளும், மக்களும் தமது அரசுகளையும், பண்பாட்டு மரபுகளையும் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு எதிராகவே செயற்பட்டு வந்தமை வரலாற்று உண்மையாகும். எனினும் போா்த்துக்கேயரது சலுகைகளுக்கும், உதவிகளுக்கும் அடிபணிந்த ஒரு சில சுயநலவாதிகளான ஆட்சியாளரதும் மக்களதும் நடவடிக்கைகளால் இவர்களது எதிா் நடவடிக்கைகள் வலுவிழந்து போயின. இவ்வாறான நிலை யாழ்ப்பாண அரசிலும் காணப்பட்டது. யாழ்ப்பாண இராச்சியத்தைப் பொறுத்தவரை போா்த்துக்கேயரது தொடா்பு ஏற்பட்ட காலப்பகுதியில் அதன் ஆட்சியாளனாக இருநத் சங்கிலி மன்னன் முதல் இறுதி ஆட்சியாளனான சங்கிலிகுமாரன் வரை தமது அரசையும், பண்பாடுகளையும் பாதுகாக்கும் வகையில் மக்களது ஆதரவுடன் அவர்களுக்கு எதிராகவே செயற்பட்டு வந்தனர். எனினும் சில ஆட்சியாளரும் மக்களும் போர்த்துக்கேயரது விசுவாசிகளாக செயற்பட்டதனால் அவர்களது எதிா்ப்பு நடவடிக்கைகள் பயனற்றவையாய் முடிவடைந்தன. எனினும் யாழ்ப்பாண இராச்சியத்தவர்கள் தமது தனித்துவப் பண்பாட்டை பாதுகாக்க போா்த்துக்கேயர் காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவு இன்றும் யாழ்ப்பாணப் பண்பாட்டை நீடித்து நிலைக்கவும் தனித்துவமானது என அனைவராலும் பாா்க்கப்படவும் காரணமானது எனலாம்

    நுரைச்சோலை அனல் மின் நிலைய அபிவிருத்தியும் சமூக பொருளாதார சூழலியல் தாக்கங்களும்

    No full text
    இலங்கையின் மின் தேவையை அனல் மின்வலு கொண்டு பூர்த்தி செய்வதை குறிக்கோளாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களில் பாரிய முதற்திட்டமே நுரைச்சோலை அனல் மின்நிலையத் திட்டமாகும். இலங்கையின் வடமேல் மாகாணத்தில் புத்தள மாவட்டத்தில் பாலாவி கல்பிட்டி பிரதான வீதியிலிருந்து சுமார் 100அ தூரத்தில் கடற்கரையோரமாக 95 ஹெக்டயர் நிலப்பரப்பில் ஒவ்வொன்றும் 300 மெகாவற் திறனளவு கொண்ட மூன்று உற்பத்தி நிலையங்களை அமைப்பது இத்திட்டத்தின் முழுமையான வரையாகும். இம்மின் நிலையமானது பிரதான மூலப்பொருளான நிலக்கரியை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இச்செயற்பாட்டால் ஏற்பட்டுவருகின்றசமூக பொருளாதார சூழலியல் தாக்கங்களை அடையாளங் காண்பதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். ஆய்வினை மேற்கொள்ள தேவையான தரவுகள் அனைத்தும் முதலாம் நிலைத்தரவுகளான 50 வினாக்கொத்துக்கள், நேரடி அவதானம், 10 நேர்காணல், 5 குழுக்கலந்துரையாடல் மூலமும் இரண்டாம் நிலைத்தரவுகளான புள்ளிவிபரங்கள், ஆவணங்கள், சஞ்சிகைகள், அறிக்கைகள், பத்திரிகைகள் மற்றும் இணையம் மூலமும் பெற்றுக்கொள்ளப்பட்டன. இத்தரவுகள் அனைத்தும் புவியியல் தகவல் தொகுதி (Arc GIS), MS Excel, SPSS போன்ற மென்பொருட்கள் மூலம் அளவுசார் மற்றும் பண்புசார் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வின் மூலம் கிடைக்கப்பெற்ற சூழலியல் ரீதியான தாக்கங்களாக நீர் நிலம் மாசடைதல், உயிர்ப்பல்வகைமை பாதிப்படைதல், சூழல் மாசடைதல், காலநிலை மாற்றம் ஏற்படல் போன்றனவும் சமூக ரீதியான தாக்கங்களாக காணி இழப்புக்கள், இடப்பெயர்வுகள், சுகாதாரப் பாதிப்புக்கள், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைதல் போன்றனவும் பொருளாதார ரீதியான தாக்கங்களாக விவசாயம், பயிர்ச்செய்கை மற்றும் மீன்பிடி நடவடிக்கைகள் பாதிப்படைதல், உப்பளங்கள் பாதிப்படைதல், சுற்றுலாத்துறை பாதிப்படைதல், நாட்டிற்கான செலவீனம் அதிகரித்தல் போன்றனவும் அடையாளம் காணப்பட்டன. எனவே நுரைச்சோலை அனல் மின்நிலைய அபிவிருத்தியால் ஏற்பட்டு வருகின்ற இவ்வாறான தாக்கங்களை குறைப்பதற்கு அரசு முன்வர வேண்டும். நிலக்கரியைக் கொண்டு இயங்கும் அனல் மின்நிலையத்திற்குப் பதிலாக மாற்று வழிமுறைகளைக் கையாண்டு நாட்டிற்குத் தேவையான மின்னை உற்பத்தி செய்வதன் மூலம் பாதிப்பற்ற மக்களையும் சூழலையும் கட்டியெழுப்ப முடிவதுடன் நாட்டில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியையும் ஏற்படுத்த முடியும்

    1,002

    full texts

    1,846

    metadata records
    Updated in last 30 days.
    IR South Eastern University of Sri Lanka
    Access Repository Dashboard
    Do you manage Open Research Online? Become a CORE Member to access insider analytics, issue reports and manage access to outputs from your repository in the CORE Repository Dashboard! 👇