South Eastern University of Sri Lanka

IR South Eastern University of Sri Lanka
Not a member yet
    1846 research outputs found

    விவசாய நடவடிக்கைகளில் மழைவீழ்ச்சி தளம்பல் ஏற்படுத்தும் தாக்கங்கள்: கலேவெல பிரதேசத்தினை மையப்படுத்திய ஒரு கள ஆய்வு

    No full text
    மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தின் கலேவெல பிரதேசம் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தின் பௌதிக அமைப்பும், காலநிலையும் இடை பிரதேச குணாம்சங்களையே பெரிதும் கொண்டுள்ளது. இவ்வாய்வின் பிரதான நோக்கம் ஆய்வுப் பிரதேசத்தின் மழைவீழ்ச்சி தளம்பலினால் விவசாய நடவடிக்கைகளில் ஏற்படும் சவால்களையும் மழைவீழ்ச்சி தளம்பலினால் விவசாயத்தில் ஏற்படும் தாக்கத்தையும் அடையாளப்படுத்துவதாகும். முதலாம் நிலைத் தரவுகளாக வினாக்கொத்து வழங்கப்பட்டு தரவுகள் பெறப்பட்டுள்ளதுடன் கலந்துரையாடல் மற்றும் அவதானம் மூலமாகவும் தரவுகள் பெறப்பட்டன. அத்துடன் இரண்டாம் நிலைத்தரவு மூலாதாரங்களான வளிமண்டல திணைக்கள வெளியீடுகள், விவசாயத் திணைக்கள அறிக்கைகள், ஆய்வுக்கட்டுரைகள், என்பனவற்றுடன் இணையத் தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பண்புசார் மற்றும் அளவுசார் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதோடு, ஆய்வுப்பிரதேசத்தின் மழைவீழ்ச்சித் தளம்பல் போக்கினை விளக்க நகரும் சராசரி முறை, எச்சத்திணிவு வளைகோட்டு முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1965 - 2014 வரையிலாக மழைவீழ்ச்சியைக் கொண்டு 5, 11, 21 நகரும் சராசரி வரையப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேகரிக்கப்படவுள்ள தரவுகள் கணினி மென்பொருளான MS Access, IBM SPSS Statistics 22 மூலமும், ARC 10 GIS மூலமும் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. கலேவெல பிரதேசத்தின் மழைவீழ்ச்சி தளம்பல் போக்கினை ஆராய்வதன் மூலம் நீண்ட கால குளிர் மற்றும் வரட்சி நிலைமை மாறி மாறி இடம் பெற்றுள்ளதை அவதானிக்கலாம். மேலும் ஆய்வுப்பிரதேசத்தில் சில பருவங்களில் போது குறுகிய காலத்தில் அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப் பெற்று வெள்ள அனர்த்தங்களும் ஏற்படுத்தியுள்ளதுடன் மழைவீழ்ச்சி குறைவாகக் கிடைக்கப் பெற்றக் காலங்களில் அதிக வறட்சி நிலைமை ஏற்பட்டு உள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளன. இம்மழைவீழ்ச்சி தளம்பலினால் விவசாய நடவடிக்கையில் பல்வேறு சவால்களை ஏற்படுத்தியுள்ளன

    இந்து சமயத் தத்துவங்களில் மனிதநேய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் சங்கரரின் அத்வைதக் கோட்பாடு: ஏனைய இந்து தத்துவங்களுடனான ஓர் ஒப்பிட்டாய்வு

    No full text
    வைதிக தத்துவங்களுள் ஒருமை வாதம் பேசும் ஒரே கோட்பாடு அத்வைதமாகும். இது கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவைச் சேர்ந்த சங்கராச்சாரியாரால் தோற்றம் பெற்றது. இதன் பின்பு தோற்றம் பெற்ற இராமானுஜரின் விசிட்டாத்வைதம், மத்துவாச்சாரியாரின் துவைதம் அத்தோடு சைவசித்தாந்தம் ஆகிய கோட்பாட்டு நெறிகள் அத்வைதத்தை விமர்சிக்க தவறவில்லை. இப்பெருந்தத்துவங்களுள் அத்வைதம் ஏனைய தத்துவங்களை விட மனிதநேய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி நிற்கின்றது. பொதுவாக தத்துவங்கள் மனிதநேயச் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவை. தத்துவங்களின் நோக்கம் இருப்புப் பொருட்களின் தேடலை மேற்கொள்வது மட்டுமே. ஆனால் இத்தகைய தேடல்களுக்கு மத்தியில் மனிதநேய ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் தத்துவமாக எங்ஙனம் அத்வைதம் அமைகின்றது என்பது ஆய்வுப் பிரச்சினையாகவுள்ளது. பிரம்மம், ஜீவன், சடவுலகம் போன்ற தத்துவ ஞானங்கள் பற்றிய தேடல்களுக்கு மத்தியில் மனிதநேய ஒருமைப்பாட்டை எங்ஙனம் அத்வைதக் கோட்பாடு சுட்டி நிற்கின்றது என இனங்காணப் து இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வு, கோட்பாட்டு ஆய்வு, ஒப்பியல் ஆய்வு ஆகிய முறைகளைப் பின்பற்றுகின்றது. அத்வைதச் சிந்தனைகள் எவ்வாறு மனிதநேயங்களை வெளிப்படுத்துகின்றன என்பது பற்றி ஆராய்வதற்கு கோட்பாட்டாய்வு பயன்படுத்தப்படும். சங்கரரின் அத்வைதத்துடன் ஏனைய வைதிக தத்துவங்களை ஒப்பிட்டு மனிதநேய ஒருமைப்பாடு பற்றி ஆராய்வதற்கு ஒப்பியல் ஆய்வு பயன்படுத்தப்படும். இவ்வாய்வின் முதலாம் தர மூலங்களாக சங்கரரின் நூல்கள், பாஷ்யங்கள் என்பன பயன்படுத்தப்படுகின்றன. துணை மூலங்களாக சங்கரரின் அத்வைதம் தொடர்பாகவும், இந்திய மெய்யியல் தொடர்பாகவும் வெளிவந்த நூல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்வைதம் வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்துகின்ற தத்துவமாகும். ஏனைய தத்துவக்கோட்பாடுகள் போன்று அத்வைதம் ஜீவாத்மாக்களுக்கிடையே பேதம் கற்பிக்காமல் ஒருமை வாதத்தினூடாக மனிதநேய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி நிற்கின்றது

    மலையக பாடசாலையும் மாணவர் இடைவிலகளும்: ப/ கொஸ்லந்தை ஸ்ரீ கணேஷா தமிழ் மகாவித்தியாலயத்தை மையமாக கொண்ட ஆய்வு)

    No full text
    21ம் நூற்றாண்டு அறிவு மைய காலம் என்பதை நிரூபிக்கும் முகமாக பெற்றோர்களும், மாணவர்களும் கல்விக்குரிய முக்கியத்துவத்தை அறிந்து செயற்படுவதுடன் இதனை உணர்ந்த இலங்கை அரசும் இலவச கல்வியுடன் செயற்படுத்தப்பட்ட கட்டாய கல்வி, பாடசாலைக் கல்வி, விஞ்ஞானக்கல்வி, தொழிநுட்பக்கல்வி என பல கல்வி முறைகளை அறிமுகப்படுத்தினாலும் ஏனைய சமூக மாணவர்களுடன் ஒப்பிடும் போது மலையக சமூக மாணவர்கள் கல்விக்குரிய முக்கியத்துவதை கொடுக்காமல் அதனைப் புறக்கணித்து பாடசாலையை விட்டு அதிகமாக இடைவிலகுகின்ற நிலைக் காணப்படுகின்றது. ஆகவே ஏன் இவ்வாறு மலையக பாடசாலை மாணவர்கள் அதிகமாக பாடசாலையை விட்டு இடைவிலகுகின்றனர் என்பதை கண்டறியும் முகமாக “மலையக பாடசாலையும் மாணவர் இடைவிலகளும்” எனும் தலைப்பில் ப/ கொஸ்லந்தை ஸ்ரீ கணேஷா தமிழ் மகாவித்தியாலயத்தை மையமாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டதுடன் இவ் ஆய்வுக்கு முதலாம் நிலைத் தரவுகளை சேகரிப்பதற்காக நோக்க மாதிரியின் அடிப்படையில் 30 மாணவர்கள் தெரிவு செய்யப்ட்டு அவர்களுக்கு வினாக் கொத்துகள் வழங்கப்பட்டு தரவுகள் பெறப்பட்டன. அத்துடன் நேர்காணல், குவியகுழு கலந்துறையாடல் மூலமும் இரண்டாம் நிலைத் தரவுகளாக மாணவ வரவு அறிக்கைகள், ஆசிரியர் வரவு அறிக்கைகள், மாணவ மதிப்பீட்டு அறிக்கைகள், நூல்கள் போன்றவைகள் மூலம் பண்பு ரீதியான, அளவு ரீதியான தரவுகள் பெற்றுக் கொள்ளப்பட்டு பகுப்பாய்வு செய்ததன் விளைவாக பொருளாதார, சமூக, குடும்ப, சூழல், பாதுகாப்பு போன்ற பல காரணிகள் மாணவர்கள் இடைவிலகளுக்கு காரணங்களாக அமைந்தாலும் பெற்றோர்களின் அசமந்தப் போக்கே அதிகமான மாணவர்கள் இடைவிலகளுக்கு காரணங்களாக அமைந்துள்ளமையை கண்டறியப்பட்டுள்ளன. எனவே இலவசக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் நடத்துவதன் மூலம் மாணவர் இடைவிலகளை குறைக்க முடியும

    Challenges of solid waste management on the estate settlements: a case study on Kuil Watte estate in Nuwara Eliya district

    Get PDF
    இன்று உலக நாடுகள் முகம் கொடுக்கும் பாரிய சவால்களுள் ஒன்றாக திண்மக்கழிவுகளின் அதிகரித்த வெளியேற்றம் காணப்படுகின்றது. விரைவாக உயர்ந்து வரும் வாழ்க்கைத்தரதிற்கேற்ப மனிததேவைகள் அதிகரித்து செல்லும் அதேவேளை, திண்மக்கழிவுகளின் வெளியேற்றமும் அதிகரித்துச் செல்கின்றது. இவ்வகையில் திண்மக்கழிவுகளை முகாமைத்துவம் செய்வதில் ஒவ்வொரு நாடுகளும் முனைப்போடு செயற்பட்டாலும் அதனது வெளியேற்றம் அதிகரித்து வரும் நிலையிலேயே உள்ளது. இலங்கையை பொறுத்தவரை திண்மக்கழிவுகள் நகர மற்றும் தோட்டப்புரங்களில் இருந்து அதிகமாக வெளியேற்றப்படுகின்றன. இதன்படி வெளியேற்றப்படும் திண்மக்கழிவுகளினை தோட்டப்பிரதேச மக்கள் முகாமைத்துவம் செய்வதில் எதிர்நோக்கும்சவால்களை அடிப்படையாகக் கொண்டதாக இவ் ஆய்வு அமைகின்றது. இதனூடாக திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாடுகள் பற்றி தோட்டப்புற மக்களுக்கு தெளிவுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். துணை நோக்கமாக முறையற்ற திண்மக்கழிவகற்றல் காரணமாக ஏற்படுகின்ற சூழல் பாதிப்புக்களை அடையாளப்படுத்தல், திண்மக்கழிவகற்றலுக்கான சிறந்த முறையினை மக்களுக்கு அறிமுகப்படுத்தல் போன்றன அமைகின்றன. ஆய்வினை மேற்கொள்ள முதலாம் நிலைத் தரவுகளாக நேரடி அவதானம், வினாக்கொத்து, நேர்காணல் போன்ற முறைகளும் இரண்டாம் நிலைத் தரவுகளாக புத்தகங்கள், பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையம் போன்றவையும் பயன்படுத்தப்பட்டன. இத்தரவுகள் அளவுசார், பண்புசார் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக GIS 10.1, Excel package போன்ற மென்பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. ஆய்வின் முடிவில் பெருந்தோட்டத்திலிருந்து வெளியேறும் திண்மக்கழிவுகள் அடையாளம் காணப்பட்டதுடன் தோட்டக் குடியிருப்பு மக்கள் திண்மக்கழிவுகளை வெளியேற்றுவதில் கொண்டுள்ள பிரச்சினைகள், தரம்பிரித்து அகற்றுவதற்கு அவர்கள் கொண்டுள்ள தெளிவுகள், திண்மக்கழிவுகளால் ஏற்படும் சூழல், சமூகம் சார் பிரச்சினைகள் போன்றனவும் அடையாளம் காணப்பட்டன.எனவே, தோட்டப்புற குடியிருப்புக்களிலிருந்து வெளியாகும் திண்மக்கழிவுகளினை Refuse, Reduce, Reuse, Recycle போன்ற முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதன் மூலமாக சூழலையும் பாதுகாத்து நிலையான அபிவிருத்தியை கட்டியெழுப்புதலே இவ்வாய்வின் தாற்பரியமாகும்

    Obstacles towards the use of ICT tools in teaching of information & communication technology in Sri Lankan universities: special references to South Eastern University of Sri Lanka

    Get PDF
    Information and communication technologies (ICT) have become commonplace entities in all aspects of life. Across the past twenty years the use of ICT has fundamentally changed the practices and procedures of nearly all forms of endeavor within business and governance. Within education, ICT has begun to have a presence but the impact has not been as extensive as in other fields. This paper examines the obstacles toward the use of Information and Communication Technology (ICT) tools in teaching and learning Information and Communication Technology at Sri Lankan Universities specially focus on South Eastern University of Sri Lanka. The finding of a survey identify that the most significant obstacles are: ICT tools are changing too fast to keep current, extra time and effort needed after integrating ICT tools teaching and learning, the management did not provide any incentive for lecturers to integrate ICT tools in their teaching, the network connectivity was poor, the management did not have any evaluation in integration of ICT tools in teaching. Further, the paper provides a summary of the significant obstacles to implementing IT tools in teaching and learning ICT in Sri Lankan Universities and suggests some possible coping strategies to mitigate their effects on ICT tools implementation and this paper adopts analytical appraisal approach hence, reviews the development so far

    A brief study of african political system: a case of state societies

    Get PDF
    In this paper, author shall be trying to look into the attributes of the tribes reflecting the characteristics of the state societies discussed in the book ‘African Political Systems’ by Fortes and Pritchard. There are five tribes that reflect the attributes of states societies, they are- the Zulu, the Ngwato, the Bemba, the Banyankole, and the Kede. Thus, in these tribes, we shall discuss in detail how there was presence of centralized authority, administrative machinery, and judicial institutions unlike in case of stateless societies that existed simultaneously in African political system that lacked centralized authority, administrative authority, and judicial institutions. Author will discuss only two detailed examples of the tribes regarded as the state societies; they are the- the Bemba and the Kede. The rationale behind choosing these two tribes were that Bemba as a tribe is slightly different from the other tribes as it reflects the characteristics of homogeneity of population unlike the other tribes of Group A. While, Kede, is a tribe that nearly represents a model of the state so it is important to discuss its characteristics in detail because these same characteristics of the Kede can be implied to the modern state societies also. It is an essential academic work which is book review oriented comparative analysis. It can be consider as a contribution to the existing knowledge of African study

    A critical study on foreign policy and its trends in the post – war Sri Lanka: a case study during 2009 - 2015

    Get PDF
    ஒரு அரசு தனது நலன்களை பாதுகாப்பதற்கும் நலன்களை உறுதியான செயற்பாட்டு நோக்கங்களாக்குவதற்குமான இலக்குகளை சிந்தித்து செயற்படுத்துவதற்கான முதல் நிலை மூலக் கூறு வெளிநாட்டுக் கொள்கை எனலாம் (Ford & Lincoln, 1962) இதனடிப்படையில் தொடர்பாடலின் விருத்தி மறுபக்கத்தில் பொருளாதார வளங்களின் அருந்தல் விதி என்பன ஒன்று சேர்ந்து நாடுகளை கிராமங்களுக்கு நிகரானதாக்கியுள்ளது. இவ்வகையில் இலங்கையின் வெளிநாட்டு உறவுகள் இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான இராஜ தந்திர மற்றும் வர்த்தக உறவினை குறிப்பதாக காணப்படுகின்றது. கடந்த மூன்று தசாப்த காலமாக இலங்கையில் இடம் பெற்ற இன முரண்பாட்டினை தொடர்ந்து இலங்கை அரசானது பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. இவ்யுத்த முடிவானது இலங்கையின் வெளிநாட்டு கொள்கையிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தென்னாசிய பிராந்தியத்தில் அபிவிருத்தியடைந்து வரும் நாடாக திகழும் இலங்கை அரசானது தேச அபிவிருத்தி என்பதில் பின்னடைவினை எதிர் கொள்கின்றது. இதற்கு கடந்த மூன்று தசாப்த காலமாக இடம் பெற்ற இன முரண்பாடே காரணமாகும். இவ்வின முரண்பாட்டினால் ஏற்பட்ட யுத்தத்தினால் தேசத்தினை கட்டியெழுப்புவதில் பெரும் சவால்களை எதிா் கொண்டிருந்தது. மேலும் இலங்கையின் யுத்த முடிவினை தொடர்ந்து வந்த அரசாங்கங்கமானது நாட்டின் சமூக, பொருளாதார, பாதுகாப்பு நடவடிக்கைகளை பேணுவதற்காக வெளியுறவுக் கொள்கையினை அமைத்துக் கொண்டமையினை காணலாம். யுத்தத்தின் பின்னரான அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையானது இலங்கை அரசியலிலும் சர்வதேச ரீதியிலும் எவ்வாறான தாக்கத்தினை செலுத்தின என்பது இவ்வாய்வினுடைய பிரச்சினையாக காணப்படுகின்றது. இதனடிப்படையில் 2009 – 2015 வரையிலான அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையானது எவ்வாறான தாக்கங்களை இலங்கை அரசியலில் ஏற்படுத்தியது என்பதனை கண்டறிதல் என்ற நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இவ்வாய்வானது பண்புசார் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக முதனிலைத் தரவுகளாக நேர்காணல் வரையுறுக்கப்பட்ட அவதானம் போன்றனவும் இரண்டாம் நிலைத்தரவுகளாக முன்னைய ஆய்வுகள், நூல்கள், சஞ்சிகைகள், புள்ளிவிபரங்கள் போன்றனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில் யுத்த முடிவினை தொடர்ந்து வெளிநாட்டுக் கொள்கையானது இலங்கையில் அரசியல் பொருளாதார வரத்தக மற்றும் சமூக ரீதியாக தாக்கத்தினை செலுத்தியதுடன் சர்வதேச ரீதியிலும் பாரிய தாக்கத்தினை செலுத்தியிருந்தன என்பது கண்கூடு

    The current status of the fisheries sector in Ampara district

    Get PDF
    The fishery sector of Ampara district is called Kalmunai fishery district because most of the fishing activities are concentrated in Kalmunai. All categories of fishing such as offshore fishing, coastal fishing and lagoon fishing are mostly practicing in this district. The fisher population of this district is 825,120 person in Marine sector and 198660 person in Inland sector (NAQD- 2014). Fishing activities in this area have been affected by ethnic conflict and the tsunami. Due to these reasons changes are clearly reflected in fish production, fishing fleet, active fishermen and catch composition, which reduced after 1981, were severely changed in 2005. However, after 2006, fisheries sector shows positive signs and increasing trend in fish production. Annual marine fish production in Ampara shows a positive trend and the latest records show a production of fishing is 535,050 metric tons (NAQD- 2015). The study shows that the Ampara District has a big potential for development of fisheries sector as resources are readily available. The level of satisfaction in fishermen in the Ampara District is higher than 50% on their crafts and gear availability as most of the fishermen now have crafts of their own. However, the gears are not available in satisfactory level. In overall, the impacts of ethnic conflict and the tsunami on livelihood of fishermen had come to an end. The fishermen have adequate amount of craft and gear when compared to the situation prior to tsunami and conflicts. Support from the government to improve the infrastructure facilities of fishery sector and introduction of modern technology will bring benefits to the fishing community who live in Kalmunai fishery district

    தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம்: தமிழில் ஒளிபரப்பப்படும் நாடகத் தொடரை அடிப்படையாகக் கொண்டதொரு ஆய்வு

    No full text
    நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் எமக்கு கிடைத்த ஒன்றாக தொழில்நுட்பக் கலைகள் விளங்குகின்றன. தொழில்நுட்பக் கலைகளில் ஒன்றான தொலைக்காட்சியின் வருகை கலைத்துறையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சியால் பல சாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது போல் பாதகமான விளைவுகளும் ஏற்பட்டுள்ளன. இவ்வாய்வு தொலைக்காட்சித் தொடர் நாடகங்கள் சமூகத்தில் ஏற்பத்தியுள்ள பாதகமான விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு முயற்சியாக அமைகின்றது. தொலைக்காட்சித் தொடர்நாடகங்களின் தன்மை, அது சமூகத்தில் எவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது, மக்களுக்கு பிரயோகமான முறையில் தொலைக்காட்சித் தொடர்நாடகங்கள் அமைய வேண்டுமானால் அவை எவ்வாறான விடயப்பொருளைப் பேசவேண்டும், அதன் காட்சிப்புல யதார்த்தம் எவ்வாறானதாக கட்டமைக்கப்பட வேண்டும் என்பனவற்றை நோக்காகக் கொண்டுள்ளது. இது சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வாக அமைவதால் பண்பு சார் ஆய்வு முறையியல் (Qualitative research design) இவ்வாய்வில் கையாளப்படுகின்றது

    இலங்கையில் அரச நிறுவனங்களில் நிலவும் வெளிப்படைத் தன்மை: கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்தை மையப்படுத்திய ஆய்வு

    No full text
    ஒரு நாட்டினுடைய ஜனநாயனத்தை அளவிடும் கருவிகளில் ஒன்றாக வெளிப்படைத்தன்மை காணப்படுவதுடன், நல்லாட்சியின் பண்புகளில் ஒன்றாகவும் வெளிப்படைத்தன்மை காணப்படுகின்றது. வெளிப்படைத்தன்மை என்பதனை தீர்மானம் எடுத்தல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்தலில் ஒழிவு மறைவின்றி மக்களின் கவனத்திற்கு கொண்டு வருதல் எனப்பொருள் கொள்ளப்படுகின்றது. இவ்வாறு ஒழிவு மறைவற்ற தன்மையினைப் பின்பற்றுவதன் மூலம் ஊழல், மோசடி என்பவற்றைத் தவிர்ப்பதுடன், பொறுப்புக் கூறக் கூடிய தன்மையும் ஏற்படுத்த முடியும். எனவே இவ்வாய்வானது அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்ற 20 பிரதேச செயலகங்களுள் ஒன்றான கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்தினை மையப்படுத்தி செய்யப்பட்டுள்ளது. கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகமானது கல்முனை, மருதமுனை, நட்பிட்டிமுனை, கல்முனைக் குடி ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாகும். ஒரு அரசின் நிருவாக விடயங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களில் முக்கிய பங்கு பிரதேச செயலகங்களிடமே காணப்படுகின்றது. இருப்பினும் இந்நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான வெளிப்படைத்மை குறைவாகவே காணப்படுவதை ஆய்வுப் பிரச்சினையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இவ்வாய்வானது கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்தில் வெளிப்படை தன்மை குறைவாக இருப்பதைக் கண்டறிதல் மற்றும் வெளிப்படைத்தன்மையுடைய பிரதேச செயலகமாக மாற்றமுறச் செய்தல் ஆகிய காரணிகளை கண்டறிதலே இவ்வாய்வின் நோக்கமாகக் காணப்படுகிறது. இவ்வாய்வானது பண்பு ரீதியான அம்சத்தினை கொண்டிருப்பதால் இவ்வாய்விற்கான தரவுகளானது 1ஆம் மற்றும் 2ஆம் தரவு நிலை மூலாதாரங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது. 1ஆம் நிலைத் தரவு மூலகங்களாக அவதானம் நேர்ககாணல் என்பற்றின் மூலமும் 2ஆம் நிலை தரவு மூலாதாரங்களாக புத்தகங்கள், அறிக்கைகள், சஞ்சிகைகள் மற்றும் இணையத்தளங்கள் மூலமாகவும் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட தகவல்களை விவரனரீதியாக பகுப்பாய்வு செய்வதன் மூலமாக கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்தின் வெளிப்படைத் தன்மை குறைவாக இருப்பதற்கான காரணிகளாக ஊழியர்களின் அலட்சியப் போக்கு, மக்களின் தீவிர அக்கறைக் காட்டாமை, ஊழல் செயற்பாடுகள், காலதாமதம், அரசியல் செல்வாக்கு, போதிய அளவு வசதி வாய்ப்பின்மை, அளவுக்கு அதிகமான ஆளனி காணப்படுதல் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன

    1,002

    full texts

    1,846

    metadata records
    Updated in last 30 days.
    IR South Eastern University of Sri Lanka
    Access Repository Dashboard
    Do you manage Open Research Online? Become a CORE Member to access insider analytics, issue reports and manage access to outputs from your repository in the CORE Repository Dashboard! 👇